உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் பறித்தவர் கைது

மொபைல் பறித்தவர் கைது

சேலம்: சேலம் கோரிமேடு, பொன்நகரை சேர்ந்தவர் அப்புல் முத்தலிப், இவரது மனைவி சபிரா, 57. இவர்கள் நேற்று மதியம் வீட்டில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த நகையை கேட்டு மிரட்டி-யுள்ளார். இதனால் பயந்த சபிரா, கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி, மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்-கிருந்த மொபைல்போனையும் எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற போது, சபிரா கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி-வந்து அந்த நபரை பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரி-வித்தனர். கன்னங்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் பொன்னம்மாபேட்டை, புத்துமாரியம்மன் கோவில் பகு-தியை சேர்ந்த தரணிஷ், 19, என்பதும், பெண்ணிடம் பறித்த தங்க தோடு, கவரிங் நகைகள், மொபைல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தரணிைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை