டேபிளில் இருந்து விழுந்தவர் பலி
ஆத்துார்:ஆத்துார், மந்தைவெளியை சேர்ந்தவர் துரை, 35. ஆத்துாரில் உள்ள ேஹாட்டலில் சப்ளையராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், இரவு மது அருந்திவிட்டு, மணிகண்டன் என்பவரது இலை கடையில் போட்டிருந்த டேபிளில் துாங்கினார். அதில் இருந்து விழுந்த அவர் இறந்துவிட்டார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.