மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு
02-Oct-2024
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று, 15,710 கனஅடியாக அதிகரித்தது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. பின்பு நீர்வரத்து குறைந்த நிலையில், டெல்டா பாசன நீர் திறப்பு கூடுதலாக இருந்ததால், அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. தமிழக-கர்நாடகா எல்-லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 12,713 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 15,710 கனஅடி-யாக அதிகரித்தது.நேற்று அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 15,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு, 800 கனஅடி நீர் வெளியேற்றப்-பட்டது. நீர்திறப்பை விட வரத்து சற்று குறைவாக இருந்தது. இதனால், நேற்று முன்தினம், 92.60 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 92.58 அடியாக சற்று குறைந்தது. அதே நேரம், 55.67 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 55.64 டி.எம்.சி.,யாக சரிந்தது.
02-Oct-2024