உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முருங்கை கிலோ ரூ.50 ஆக உயர்வு

முருங்கை கிலோ ரூ.50 ஆக உயர்வு

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் முருங்கைக்காய் மரம் வரப்பு பயிராகவும், தோப்பாகவும் நடவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், முருங்கைக்காய் மற்றும் கீரை அறுவடை செய்து, உழவர் சந்தை, உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்கின்றனர். தற்போது முருங்கைக்காய் உற்பத்தி சீசன் தொடங்கியதால், கடந்த வாரம் கிலோ முருங்கைக்காய், 20 ரூபாய்க்கும் குறைந்தது. அடிக்கடி மழை பெய்ததால், மரத்தில் இருந்த பூக்கள் உதிர்ந்து, உற்பத்தியும் குறைந்தது. இந்நிலையில் நேற்று, தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய், 50 ரூபாய், ஒரு காய், 5 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை