போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி
சேலம் : சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை, 6:00 மணிக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். அங்கிருந்து கந்தம்பட்டி வரை, வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன, ஒரு மணி நேரத்துக்கு மேலாக நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: மாமாங்கத்தில் மேம்பால பணி நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரதான சாலையில் போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்ல, நெரிசல் அதிகமாகி, வாகனங்கள் ஊர்ந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் போலீசார் வரவில்லை. பண்டிகை காலம் வர உள்ளதால், அதற்கேற்ப போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், உரிய போலீசாரை பணி அமர்த்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.