உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் நந்தவன ஆக்கிரமிப்பு; 2 வீடுகள் இடித்து அகற்றம்

கோவில் நந்தவன ஆக்கிரமிப்பு; 2 வீடுகள் இடித்து அகற்றம்

மேட்டூர்: கோவில் நந்தவனத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, மேட்டூர் மேற்கு நெடுஞ்சாலையோரம் மீனாட்சி சொக்கநாதர், ஞான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை சார்பில், 2.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச், 20ல், பாலஸ்தாபன விழா, மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து புனரமைப்பு பணிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை முடிவு செய்தது.கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில், 12 சென்ட் நிலத்தில் நந்தவனம் இருந்தது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து ஓட்டு வீடு, கூரை வீடு கட்டியிருந்தனர். இதனால் நேற்று அறநிலையத்துறை சேலம் உதவி கமிஷனர் ராஜா தலைமையில் பணியாளர்கள், பொக்லைன் மூலம் சுற்றுச்சுவர், அதன் அருகே கட்டியிருந்த இரு வீடுகளை இடித்து அகற்றினர். மேட்டூர் வருவாய்த்துறை, நகராட்சி ஊழியர்கள், அசம்பாவிதத்தை தடுக்க மேட்டூர் போலீசார், தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடிந்து, கோவில் நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ