உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நேரு பிறந்தநாள் காங்., கொண்டாட்டம்

நேரு பிறந்தநாள் காங்., கொண்டாட்டம்

தாரமங்கலம்: முன்னாள் பிரதமர் நேருவின், 135வது பிறந்தநாள் விழா, தாரமங்கலத்தில், நகர காங்., சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் சண்முகம் தலைமையில் கட்சியினர், நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மாவட்ட துணை செயலர் ரத்தினம், செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், இலக்கிய அணி துணை செயலர் பன்னீர் செல்வம், நகர துணை செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் சங்ககிரி நகர காங்., சார்பில், நகர தலைவர் ரவி தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில், நேரு படத்தக்கு, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மலர்துாவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மாவட்ட பொது செயலர்கள் நடராஜன், ராமமூர்த்தி, காசிலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை