உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1 மணி நேரம் பணியை புறக்கணித்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

1 மணி நேரம் பணியை புறக்கணித்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம்: அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல், 3 நாட்களுக்கு ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவ-தாக, தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்-டது. அதன்படி சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், நேற்று காலை, 8:00 முதல், 9:00 மணி வரை பணியை புறக்க-ணித்தனர். தொடர்ந்து மாநில துணை தலைவி கீதா தலை-மையில், கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி, மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுகுறித்து மற்றொரு, மாநில துணை தலைவி சுதா கூறியதா-வது:முதல்வர் விஜய், அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதி-யத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரப்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதை வரவேற்கிறோம். அதேநேரம் புது பணி-யிடங்களை உருவாக்காமல், இந்த அறிவிப்பால் எந்த பணிச்சு-மையும் குறையாது. புது பணியிடங்களை உருவாக்கி அறிவிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையான பணி நிரவல் ஆணையை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அதேபோல் மாவட் டம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !