உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வர்த்தக அணி அலுவலகம் ஓமலுார் எம்.எல்.ஏ., திறப்பு

வர்த்தக அணி அலுவலகம் ஓமலுார் எம்.எல்.ஏ., திறப்பு

ஓமலுார்: ஓமலுாரில், தாரமங்கலம் பிரிவு சாலையில், அ.தி.மு.க., வர்த்தக அணி மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.மாவட்ட செயலர் மகதேஸ் சந்திரன் தலைமை வகித்தார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பரமசிவம் இணைந்து, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கட்சியினர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து வர்த்தக அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, ஓமலுார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், வர்த்தக அணி இணை செயலர்கள் ரவி, வரதராஜ், ஒன்றிய செயலர்கள் செந்தில், விமல்குமார், மணிமுத்து, நகர செயலர்கள் சரவணன், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ