தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி: மக்கள் தர்ணா
இடைப்பாடி சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றியம் மசியன் தெரு, காட்டூர், அண்ணா நகர் பகுதிகளில் ஓராண்டுக்கு மேலாக, அப்பகுதியில் உள்ள சாக்கடை தடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், மக்கள் அவதிப்படுகின்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், நேற்று இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதன் வளாத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இடைப்பாடி பி.டி.ஓ., செல்வகுமார், பேச்சு நடத்தி, சாக்கடை செல்ல வழிவகை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதனால் தர்ணாவை கைவிட்டனர்.