உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்: இடதுசாரி மாணவர் அமைப்புகள் சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அகில இந்திய மாணவர் பெரு-மன்ற சேலம் மாவட்ட செயலர் நேதாஜி, அகில இந்திய ஜனநா-யக வாலிபர் சங்க மாவட்ட செயலர் பெரியசாமி தலைமை வகித்-தனர்.அகில இந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலர் பாரதி பேசு-கையில், ''முதல்வர் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி, மாணவர்க-ளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வேண்டும்,'' என்றார். முன்-னதாக நீட் தேர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அமைப்பின் நிர்வாகிகள் பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை