உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சர்வீஸ் சாலையோரம் மழைநீர் வடிகால் தேவை

சர்வீஸ் சாலையோரம் மழைநீர் வடிகால் தேவை

பனமரத்துப்பட்டி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே பொய்மான் கரடு உள்ளது. அங்கு உற்பத்தியாகும் மழை நீர், நெடுஞ்சாலையோரமாக கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் சென்று, ஓடையில் கலந்து துர்க்கை அம்மன் கோவில் ஏரியை அடைகிறது.மழைநீர் செல்ல, சர்வீஸ் சாலையோரம் கால்வாய் இல்லை. இதனால் சர்வீஸ் சாலையில் மழைநீர் ஓடுகிறது. அத்துடன் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. பொய்மான் கரட்டில் இருந்து மழைநீர் செல்ல, சாலையோரம் கால்வாய் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !