உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலம், மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சேலத்தில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியே சென்ற ஊர்வலம், மீண்டும் கலெக்டர் அலுவலகத்திலேயே முடிந்தது. கல்லுாரி மாணவ, மாணவியர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.ஊர்வலத்தின்போது மழைநீர் சேகரிப்பு அவசியம், தண்ணீர் தேவை குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். அத்துடன், குறைந்த செலவில் மழைநீரை எவ்வாறு சேமிக்கலாம் என்ற விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், மக்களிடம் வினியோகிக்கப்பட்டன. முன்னதாக, விழிப்புணர்வு குறும்படத்தை, கலெக்டர் பார்வையிட்டார்.பின், குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் பரிசோதனை வழிமுறைகளை பார்வையிட்டார். வாரிய நிர்வாக பொறியாளர்கள் மகாதேவன், ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை