உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பரவியிருந்த ஜல்லி கற்கள் அகற்றம்

விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பரவியிருந்த ஜல்லி கற்கள் அகற்றம்

விபத்துகளை ஏற்படுத்தும் வகையில்பரவியிருந்த ஜல்லி கற்கள் அகற்றம்வீரபாண்டி, நவ. 5-நெடுஞ்சாலை-சர்வீஸ் சாலை இணைப்பில், விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பரவியிருந்த ஜல்லி கற்கள் அகற்றப்பட்டது. சேலம்-கோவை நான்கு வழிச்சாலையில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன் ஒருவழிப்பாதையாக உள்ள மேம்பாலத்தை, இருவழி பாதையாக மாற்ற புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், அரியானுாரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், உத்தமசோழபுரம் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. நெய்காரப்பட்டி சர்வீஸ் சாலை நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில், அரிப்பினால் சாலை நடுவே ஜல்லி கற்கள் பெயர்ந்து பரவியிருந்தது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்தனர்.இது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்தை சிறிது நேரம் தடை செய்து, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பரவியிருந்த ஜல்லி கற்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை