உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுகோள்

கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுகோள்

சேலம்: சேலத்தில், தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட அமைப்பு குழு மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் மாநில துணைத் தலைவர் ரமேஷ் முன்னி-லையில், சங்கர் நகரில் உள்ள சேலம் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது.சங்க மாநில தலைவரும், சமூக சமத்துவத்துக்கான மருத்து-வர்கள் சங்க பொது செயலாளருமான ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் கொசுப்புழு ஒழிப்பு பணியா-ளர்கள், 2016ல் இருந்து தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், 1,500 பேர் பணிபுரிகின்-றனர். இவர்களை 'செமி ஸ்கில்டு கிரேடு-1' பணியாளர் என வகைப்படுத்தி தினக்கூலி வழங்க வேண்டும். ஆனால் 'அன் ஸ்கில்டு' என தவறாக வகைபடுத்தி நாள் ஒன்றுக்கு, 523 ரூபாய் சம்பளம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இந்த குறைந்தபட்ச சம்பளம் கூட வழங்கப்படாமல் பல பகுதி-களில், 200 முதல் 480 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். டெல்-லியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை அம்மாநில அரசு பணி நிரந்தரம் செய்துள்ளது. இதே போல் தமிழகத்திலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.இணை பொதுச்செயலாளர் சாந்தி, ஏ.ஐ.டி.யு.சி., சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சம்பத், துணைத் தலைவர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை