உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு காப்பு

தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு காப்பு

சேலம்:தொழிலாளிக்கு தொடர்ந்து தொந்தரவு தந்து அவரை தாக்கிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம், ஏற்காடு அடிவாரம், கொண்டப்பநாயக்கன்பட்டி, சத்யா நகரை சேர்ந்தவர் சத்யமூர்த்தி, 23. அதே பகுதியில் உள்ள மர அறுவை மில்லில் பணிபுரிகிறார். இவர் கடந்த மாதம், 31 இரவு, இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட, அடிவாரத்தில் உள்ள பங்க்குக்கு சென்றார். அப்போது அவருக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த பூசன்குமார் உள்பட, 2 பேர் வழிமறித்து, 'எதற்கு வேகமாக வருகிறாய்' என சத்யமூர்த்தியிடம் கேட்டு தகாத வார்த்தையால் பேசிச்சென்றனர். தொடர்ந்து கடந்த, 2 இரவு, வீடு அருகே மொபைல் போனில் சத்தயமூர்த்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே நபர்கள், மொபைலை பறித்து தப்பினர். மறுநாள், அழகாபுரம் படையப்பா நகரில் சென்ற சத்யமூர்த்தியை, அதே கும்பல், கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர் புகார்படி அழகாபுரம் போலீசார் விசாரித்து, அழகாபுரம், பெரியபுதுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ், 26, மனோஜ், 20, கொண்டப்பநாயக்கன்பட்டி பூசன்குமார், 25, ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை