உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை வசதி கேட்டு 5 மணி நேரம் சாலை மறியல்

அடிப்படை வசதி கேட்டு 5 மணி நேரம் சாலை மறியல்

ஓமலுார்: காடையாம்பட்டி, குண்டுக்கல், கொண்ரெட்டியூரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு முறையாக குடிநீர் வழங்குவதில்லை; பொது கழிப்பறை இல்லை என அப்பகுதி மக்கள், ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி, சின்னதிருப்பதி - காடையாம்பட்டி சாலையில் கற்கள், கட்டைகளை வைத்து, சாலை மறியலை தொடங்கினர். அங்கு சென்று, தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சு நடத்தியும் பலனில்லை. போக்குவரத்து பாதிக்-கப்பட்டது. தொடர்ந்து பி.டி.ஓ., பானுமதி, தாசில்தார் நாகூர்-மீரான் பேச்சு நடத்தினர். அப்போது, பெரிய தொட்டிகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்து, திறந்த வெளியில் தண்ணீர் பிடிக்கும் வசதி, பொது இடத்தில் கழிப்-பறை அமைக்க உரிய இடத்தை தேர்வு செய்யவும், 125 பேருக்கு இல-வச வீட்டுமனை பட்டா வழங்கவும், உரிய நடவடிக்கை எடுப்-பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 5 மணி நேர மறியலை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை