உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி மோதி ஏட்டு பலி ரூ.1 லட்சம் நிதி உதவி

லாரி மோதி ஏட்டு பலி ரூ.1 லட்சம் நிதி உதவி

வாழப்பாடி,:சிமென்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி மோதி ஏட்டு பலியானார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசநத்தத்தை சேர்ந்தவர் அன்புராஜ், 39. சேலம், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தார். அங்குள்ள போலீஸ் குடியிருப்பில், குடும்பத்துடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:15 மணிக்கு, அன்புராஜ், காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளியில் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சிங்கிபுரத்தில் உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து, லோடு ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்த லாரி மோதி, அன்புராஜ் உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார், லாரி டிரைவரான, வாழப்பாடி, பொன்னாரம்பட்டியை சேர்ந்த சுரேஷ், 37, என்பவரை கைது செய்தனர். அன்புராஜ் உடலுக்கு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி அஞ்சலி செலுத்தினார். இறுதி சடங்கிற்கு, 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ