உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சீசன் திருடர்களை பிடிக்க சோதனை; பட்டாசு எடுத்துச்சென்றால் சிறை

சீசன் திருடர்களை பிடிக்க சோதனை; பட்டாசு எடுத்துச்சென்றால் சிறை

சேலம்: சீசன் திருடர்களை பிடிக்கவும், பட்டாசு எடுத்துச்செல்கின்றனரா என்பதை கண்காணிக்கவும், ரயில்களில் போலீசார் சோதனை நடத்தினர்.தீபாவளியை முன்னிட்டு சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரளாவுக்கு செல்லும் ரயில்களில், 'மப்டி'யில் போலீசார் கண்காணிக்கின்றனர். சேரன் எக்ஸ்பிரஸ், பெங்களூரு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்களில் பெண் போலீசார், சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் ஜங்ஷனுக்கு வரும் ரயில்களில் பெண்கள் அதிகளவில் உள்ள பெட்டிகளில் சந்தேக நபர்கள் வந்து செல்கின்றனரா, ஸ்டேஷன்களில் சீசன் திருடர்களின் நடமாட்டம் உள்ளதா, பயணியர் பட்டாசுகளை எடுத்துச்செல்கின்றனரா என கண்காணிக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் ஆர்.பி.எப்., - ரயில்வே போலீசார், பயணியரின் உடைமைகளை சோதனை செய்தனர். பட்டாசு, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளதா என மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் மூலம் சோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மீறி கொண்டு சென்றால் அவர்கள் மீது ஆர்.பி.எப்., போலீசார் மூலம் வழக்கு நடவடிக்கை எடுத்து, 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை