மேலும் செய்திகள்
வாலிபர் மரணத்தில் திருப்பம் மனைவியிடம் விசாரணை
25-Nov-2025
மேட்டூர்: சேலம், அம்மாபேட்டை, தங்கசெங்கோடன் தெருவை சேர்ந்-தவர் மணிகண்டன், 45. பட்டு நுால் வியாபாரி. இவரது மனைவி கவிதா, 40. இவர்களது மகன் சாய்சபரி, 15. நேற்று மணி-கண்டன், 'வெர்னா' காரில், மேட்டூர் அடுத்த சாம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார்.உடன் மணிகண்டனின் தாய் லட்சுமி, சாய்சபரியும் சென்றனர். மதியம், 1:30 மணிக்கு பொட்டனேரி அருகே சென்றுகொண்டி-ருந்தபோது நாய் குறுக்கே வந்ததால், மணிகண்டன் காரை வலது-பக்கம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளியமரத்தில் மோதி சேதமானது. இதில் மணிகண்டன், சம்பவ இடத்தில் பலியானார். லட்சுமி, சாய்சபரி காயம் அடைந்தனர். இருவரையும் மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Nov-2025