உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலை நிறுத்த போராட்டம்

வேலை நிறுத்த போராட்டம்

சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் 48 பெண்கள் உள்பட 83 ஊழியர்கள் வேலை செய்கின்றனர் அவர்கள் பாதுகாவலர் உள்பட பல்வேறு பணிகளை செய்கின்றனர். அவர்களுக்கான மே மாத ஊதியம் ஜூன் மாதம் 7ம் தேதிக்குள் வழங்கப்படும்.ஆனால் தற்போது 20ம் தேதி ஆகியும் ஊதியம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை