உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 100 கிலோ குப்பை மாணவர்கள் சேகரிப்பு

100 கிலோ குப்பை மாணவர்கள் சேகரிப்பு

ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள இந்திய தாவரவியல் ஆய்வு மையம் சார்பில், துாய்மையே சேவை திட்டத்தில், பொது இடங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மைய விஞ்ஞானி கலியமூர்த்தி தலைமை வகித்தார். ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன், சேலம் வனப்பிரிவின் உயிரியலாளர் பிரவீன்குமார், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் புஷ்பராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், 51 பேர், சன்னியாசி காப்பு காட்டில் உள்ள பிளாஸ்டிக் கழிவு, சேர்வராயன் கோவில் வளாகத்தை சுத்தப்படுத்தினர். மாணவ, மாணவியருடன் வனத்துறை பணியாளர்கள், ஆய்வு மைய பணியாளர்கள், துாய்மை பணியில் ஈடுபட்டனர். 100 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டு, ஒன்றிய துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ