உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நவீன வசதிகளுடன் செயல்படும் தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

நவீன வசதிகளுடன் செயல்படும் தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தரண் மருத்துவமனையில், 24 மணி நேர அவசர கால சிகிச்சை முதல், பல்நோக்கு மருத்துவம் வரை மேற்கொள்ளப்படுகிறது. 2018ல் குழந்தையின்மை சிகிச்சைக்கு, 'தரண் விமன்ஸ் கேர்' தொடங்கி செயல்பட்டு வருகிறது.அதேபோல் பெருகி வரும் புற்றுநோய் விகிதத்தை கருதி, 'தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்' தொடங்கி செயல்பட்டு வருகிறது.இதன் சிறப்பம்சம் குறித்து தரண் மருத்துவமனை மேலாண் இயக்குனர் செல்வராஜா, இணை மேலாண் இயக்குனர் குணசேகரன் கூறியதாவது:தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர், அதிநவீன கதிர்வீச்சு(ட்ருபீம் எஸ்.டி.எக்ஸ்., லினெக் அக்சிலேட்டர்), பிராகி தெரபி சிகிச்சை வசதிகளுடன், வெவ்வேறு வகை புற்றுநோய்களை கண்டறியும் அதிநவீன ஜி.இ-., பெட்-சிடி, காமா கேமரா, ஸ்கேன் போன்ற அதிநவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை.சிறப்பு புற்றுநோய் பரிசோதனைகள், சிகிச்சைகள், குறைந்த செலவில் அரசு, தனியார் காப்பீட்டு வசதியுடன் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சேலத்தில் அனைத்து வித புற்றுநோய்களை, மருத்துவ பரிசோதனை மூலம் மிக துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை, தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டரில் திறம்பட மேற்கொள்ளப்படும் என, மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி யுதய்சரண் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை