உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம், ஈரோடு, நாமக்கல்லில் விஜிலென்ஸ் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்

சேலம், ஈரோடு, நாமக்கல்லில் விஜிலென்ஸ் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்

நாமக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், ஓசூர் ஆகிய இடங்களில் விஜிலென்ஸ் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3qn238gi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாமக்கல் மாவட்டம், மோகனுார், ராசிபாளையத்தை சேர்ந்தவர் மாதவன், 31; சொட்டு நீர் பாசன கருவிகளை விற்பனை செய்து வருகிறார். சேந்தமங்கலம் வட்டார வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் லீலா, விவசாயிகளின் சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க, ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாதவன், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார்.அவர்களின் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய, 1,000 ரூபாயை, நாமக்கல் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, லீலாவிடம், மாதவன் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், லீலாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.* சேலம் மாவட்டம், வாழப்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், சேலம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் முருகன், நரேந்திரன் தலைமையில் போலீசார், நேற்று மாலை, 4:00 மணிக்கு சோதனையை தொடங்கினர். இரவு, 7:40 மணி வரை சோதனை நடந்தது. அதில் வாழப்பாடி சார் - பதிவாளரான, வலசையூரை சேர்ந்த நளினா(பொ), 53, அறையில், கணக்கில் வராத, 1.80 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். * ஈரோடு வெண்டிபாளையத்தில், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு தலைமையகமாக உள்ளது. இங்கு கரூர் உட்கோட்ட உதவி செயற்பொறியாளராக பணிபுரிபவர் குமரேசன், 51. நேற்று மாலை எஸ்.ஆர்.சி., ப்ளூ மெட்டல் குவாரியை சேர்ந்தவர்கள், குமரேசனுக்கு கொடுக்க பணம் கொண்டு வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார், நேற்று மாலை, 5:15 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத, மூன்றரை லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. குமரேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, மாநில எல்லை ஜூஜூவாடியில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கான ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் உள்ளது. இங்கு வரும் வாகனங்களுக்கு கட்டணத்துடன் உள் அனுமதி சீட்டு வழங்கப்படும். அங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் எஸ்.ஐ., விஜயகுமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இரவு, 7:30 மணி வரை நீடித்த இச்சோதனையில், கணக்கில் வராத, 1.48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். * திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகம் - 2ல், சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ