உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிராம மக்கள் மறியல்

கிராம மக்கள் மறியல்

இடைப்பாடி; இடைப்பாடி அருகே, தார் சாலையை சீரமைக்க கோரி நேற்று மறமுற்றுகை போராட்டம் நடத்தி-னார்கள்.இடைப்பாடி அருகே, அரசிராமணி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு காடு பகுதி முதல், செட்டிபட்டி வரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. சாலை வழியாக மண் கடத்தும் லாரிகள் பலமுறை சென்று வருவதால், ஓராண்டாக ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி, அப்பகுதி கிராம மக்கள் வடக்கு காடு கிராம சாலையில் மரங்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்-டனர். தேவூர் ஆர்.ஐ., கனகராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி-யதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை