உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முழு அளவில் உற்பத்தி கோரிய நெசவாளர்கள் முதல்கட்டமாக 5.49 லட்சம் வேட்டிக்கு உத்தரவு

முழு அளவில் உற்பத்தி கோரிய நெசவாளர்கள் முதல்கட்டமாக 5.49 லட்சம் வேட்டிக்கு உத்தரவு

ஈரோடு, முழு அளவில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ஆணை வழங்க நெசவாளர்கள் கோரிய நிலையில், முதல்கட்டமாக, 5.49 லட்சம் வேட்டி உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டுள்ளனர்.தமிழகத்தில், பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், அந்தியோதையா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள் என, 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலை உற்பத்திக்கு உத்தரவிடப்படும். கடந்தாண்டு தாமதமாக உற்பத்தி துவங்கியதால், இறுதியாக உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலை இருப்பை கணக்கிட்டு, இந்தாண்டு விசைத்தறியில், 1 கோடியே, 66,059 சேலை, 1 கோடியே, 28 லட்சத்து, 80,965 வேட்டிக்கு மட்டும் ஆர்டர் வழங்கப்பட்டது. இதனால், 3 மாதம் விசைத்தறியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக்கூறி, முழு உற்பத்திக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதில், முதல்கட்டமாக, 5.49 லட்சம் வேட்டிகளை விசைத்தறியில் உற்பத்தி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுபற்றி, தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் கந்தவேல் கூறியதாவது: இந்தாண்டு குறைக்கப்பட்ட, 77 லட்சம் சேலை, 49 லட்சம் வேட்டிகளுக்கும் ஆர்டர் வழங்க வலியுறுத்துகிறோம். முதல்கட்டமாக, 5 லட்சத்து, 49,422 வேட்டி உற்பத்தி செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சரக வாரியாக ஈரோடு - 1.99 லட்சம், திருச்செங்கோடு - 1.75 லட்சம், கோவை - 1.25 லட்சம், திருப்பூர் - 50 ஆயிரம் வேட்டி உற்பத்தியாக பிரித்து வழங்கி உள்ளனர். ஏற்கனவே வழங்கிய இலவச வேட்டி, சேலை ஆர்டரில், 90 சதவீத வேட்டி, 70 சதவீத சேலை உற்பத்தி முடிந்துவிட்டது. இன்னும், 10 முதல், 25 நாளில் முழு உற்பத்தியும் முடியும். அதன் பின் விசைத்தறியாளர்களுக்கு வேலை இருக்காது. எனவே, குறைக்கப்பட்ட வேட்டி, சேலையை முழுமையாக வழங்கி உத்தரவிட வேண்டும். இதன் மூலம் ஜன., இறுதி வரை விசைத்தறியாளர்கள் வேலை பெறுவர்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை