உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் சரண்

போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் சரண்

சேலம், சேலம், சிவதாபுரம், பனங்காடு அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 43. டேக்வாண்டோ பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது தம்பி கணேசன், 42. கூலித்தொழிலாளி. கடந்த, 4ல், திருவாரூரில் நடந்த டேக்வாண்டோ போட்டிக்கு, பயிற்சி பெறும் மாணவ, மாணவியரை அழைத்துச்சென்றபோது, 14 வயது சிறுமிக்கு, கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என விஜயகுமார், கணேசன் ஆகியோர், சிறுமிக்கு மிரட்டல் விடுத்தனர். சூரமங்கலம் மகளிர் போலீசார், விஜயகுமாரை கைது செய்து, கணேசனை தேடி வந்தனர். நேற்று கணேசன், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி