உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காடு வெறிச் வியாபாரிகள் ஏமாற்றம்

ஏற்காடு வெறிச் வியாபாரிகள் ஏமாற்றம்

ஏற்காடு: ஏற்காடுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்வர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ஓணம் பண்டிகை, மிலாது நபியால் விடுமுறை விடப்பட்டிருந்ததால், நேற்று ஏராளமான சுற்-றுலா பயணியர் வருவர் என, ஏற்காடு உள்ளூர் வியாபாரிகள் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, குறைந்த அளவிலான சுற்றுலா பயணியரே வந்-தனர். இதனால் படகு இல்லம், அண்ணா, ஏரி, தாவரவியல், சூழல் சுற்றுலா பூங்காக்கள், ரோஜா தோட்டம் ஆகிய இடங்-களில் குறைந்த அளவிலான சுற்றுலா பயணியரே காணப்பட்-டனர். இதனால் வியாபாரம் களைகட்டும் என எதிர்பார்த்த வியா-பாரிகள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை