உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்! ரஜினி கருத்துக்கு கோவை மக்கள் வரவேற்பு

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்! ரஜினி கருத்துக்கு கோவை மக்கள் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் நடந்த தி.மு.க., நுால் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, 'சீனியர் மாணவர்கள் பள்ளியை விட்டு போக மறுக்கின்றனர்' என, மூத்த அரசியல்வாதிகள், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதை, மறைமுகமாக தெரிவித்திருந்தார்.அவரது கருத்து, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு பதிலடியாக, 'மூத்த நடிகர்கள் பல் விழுந்து, சாகிற நிலையில் நடித்து வருவதாக', தி.மு.க., மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் நகைச்சுவையாக கூறியுள்ளார்.இந்த விவகாரம் குறித்து, கோவையில் சிலரிடம் பேசினோம்...!

பயந்து ஓடியவர்

தி.மு.க., கட்சியில் மூத்த தலைவர்கள், இளைஞர்களை விட சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அதே சமயம் இளைஞர்களுக்கு வழிவிட்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க., கட்சியில் அடுத்து ஆளப்போவதும் இளைஞர்கள் தான். ரஜினி நகைச்சுவையாக கூறியிருந்தாலும், அரசியலுக்கு வருவதாக கூறி பயந்து சென்றவரின், அரசியல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.- அஸ்லாம் பாஷா கவுன்சிலர், தி.மு.க.,

ரஜினியின் கருத்து தவறு

ரஜினி கூறியது அவரது வாழ்க்கைக்கே பொருந்தாது. நியாயப்படி அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு ஓய்வே கிடையாது. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற கருத்து நல்லதுதான். ஆனால் இளைஞர்களை வழி நடத்த, மூத்த அரசியல்வாதிகள் வேண்டும். அவரது கருத்து தவறு.- ஹரிகரசுதன் தேசிய ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்

இளைஞர்கள் வரணும்

ரஜினியின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது. மூத்த அரசியல்வாதிகளே தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகவும், எம்.பி.,யாகவும் இருந்து வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறைந்து விடும். இளைஞர்கள் கையில் அரசியல் கிடைத்தால்தான், நாடு முன்னேறும். மூத்த அரசியல் வாதிகள் ஓய்வு பெறுவதற்குள், இளைஞர்களுக்கு வயதாகி விடும்.-பாஸ்கரன் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர்.

இளைஞர்களால் மாற்றம் வரும்

புதியவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் மாற்றம் வரும். எப்போதும், இட்லி அல்லது தோசையே சாப்பிட்டவர்களுக்கு, பிற உணவின் சுவை தெரியாது. அதுபோல தான், பழைய கட்சிகள், அரசியல் தலைவர்களின் நடைமுறையை மட்டுமே பார்த்து வருகிறோம். தற்போது, சிலர் புதிதாக அரசியலுக்கு வருகின்றனர். நடிகர் விஜய்யின் வருகை, பல இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தும்.- கதிரேசன் தொழில்முனைவோர்

இளைஞர்கள் தேவை

மூத்த அரசியல்வாதிகளுக்கு, இப்போது உள்ள தொழில் நுட்பங்கள் தெரியாது. ஏ.ஐ., சமூக வலைதளம் என இளைஞர்கள், உலகையே கையில் அடக்கி வைத்துள்ளனர். புத்தகங்களை மட்டும் படித்த மூத்த அரசியல்வாதிகளுக்கு, தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுக்க இளைஞர்கள் தேவை. அதற்கு பதிலாக, இளைஞர்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்தால், அரசியலில் பல முன்னேற்றம் ஏற்படும்.- செல்வகுமார் பயிற்சி ஆசிரியர்

மூத்தவர்கள் வழிகாட்டணும்

இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்கதே. அதற்காக, அனுபவம் வாய்ந்தவர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை, வயதானவர்கள் என புறம்தள்ளி விடக்கூடாது. அவர்களின் வழிகாட்டுதலோடு, அடுத்த தலைமுறைக்கு அரசியலை பழக்குவதுதான் சரியானதாக இருக்கும். மூத்தவர்களும் தாங்களாக முன்வந்து, இளைஞர்களுக்கு வழிகாட்டி, வளர்த்துவிட வேண்டும்.- ரஞ்சித் தொழில் முனைவோர்

மூத்தவர்களும் வேண்டும்

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மூத்தவர்களும் வேண்டும். பல மூத்த அரசியல்வாதிகள் தான் நாட்டை நல்ல முறையில் வழி நடத்தி உள்ளார்கள். அதே சமயம், தற்போது அரசியலில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ரஜினி பேசும் போது, மூத்தவர்கள் வேண்டாம் என கூறவில்லை. அவர்களின் திறமையை பாராட்டி இருந்தார்.- சுரேந்தர் டிரைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Durai Kuppusami
செப் 20, 2024 07:49

இவர் ஒரு மெண்டல்.. இவர் உளருவதை யாரும் மதிக்க மாட்டார்கள்.... நல்ல இடத்தில் தான் பேசுகிறார்..... அடுத்த படம் வரப்போவுதா....


Vijay D Ratnam
ஆக 28, 2024 22:21

மொதல்ல இந்த 75 வயசு கெழடு கட்டைங்க கிட்ட மைக்க நீட்றத நிறுத்தி தொலைங்கய்யா. ஏதாவது வாய்க்கு வந்ததை பினாத்திட்டு போயிடுறானுங்க, அத்த ஒரு நியூஸாக்கி உருட்டிகினு. எங்க தாத்தாக்கூட இப்படித்தான் நாம ஒன்னு சொன்னா அவரு எதுனாச்சும் பினாத்துறாரு. புத்தக வெளியீட்டுக்கு வந்தா கருணாநிதி நல்லவரு, வல்லவருன்னு அடிச்சி உட்டுட்டு போவ வேண்டியதுதானே. அந்த துரைமுருகன் இவரை என்ன பண்ணாரு. லாரி கிளீனர் பக்கத்துலதான் ஒக்காந்து இருந்தாரு. எவனோ சொன்னான்னு அவர் பேரை சொல்லியிருந்தால், அந்தாளு கொஞ்சம் ரக்குடான ஆளு.


Rengaraj
ஆக 27, 2024 11:26

ரஜினி தைரியம் இல்லாதவர். அரசியலுக்கு வராமல் ஏமாற்றிய ஒரு தொடை நடுங்கி . இவர் பேசினால் ரசிக்கும் கூட்டம் இன்னும் இருக்கிறது என்று ரசிகர்களையும் மக்களையும் நம்பவைக்க காதில் பூ சுற்றுகிறார்கள். இவரையும் கூப்பிட்டு ஒரு அரசியல் கட்சி பேசச்சொன்னால் அது அந்த கட்சிக்கு மக்களிடம் ஆதரவு குறைந்து வருகிறது , மவுசை கூட்டணும் அதற்கு வேறு ஆட்கள் இல்லை என்று பொருள். ஏன் இவரை கூப்பிட்டு பேசசொல்லணும் ? இவருக்கு முன்னால் கட்சி ஆரம்பித்து தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசனை ஏன் கூப்பிடவில்லை. ? ரஜினி என்ன பெரிய அரசியல் சாணக்யரா ? அவர்களுக்கு அட்வைஸ் பண்ண, தி.மு.க மூத்த நிர்வாகிகள் பற்றி கருத்து சொல்ல இவர் எதுக்கு ? அங்கே ஆட்களே இல்லையா ? அங்க இருக்கும் ஒரு வட்ட செயலாளருக்கு இருக்கும் அரசியல் தெளிவு கூட இவருக்கு கிடையாது இவரையெல்லாம் கூப்பிட்டு பேசச்சொல்லும் அந்த கட்சிக்கு எதிர்கால திட்டம் எதுவும் இல்லை போலிருக்கிறது. இனிமேல் தன்னோட படத்துக்கு பைனான்ஸ் பண்ண லைக்கா , சன் டீ.வி குரூப் மாதிரி பெரிய பேனர் தேவை , அவர்களை ஐஸ் வைக்க இந்த விழாவை நல்ல பயன்படுத்திக்கிட்டார் , அவ்வளவுதான் இப்போ பா.ஜ.க கட்சிக்காரர்ங்க இவரை வைத்து படம் எடுப்பதாக சொன்னா மோடியை பாராட்டுவார் எடப்பாடி குரூப் படம் எடுத்தா அவரையும் தூக்கி வைத்து பேசுவார் எல்லாம் சுயநலம்தான் இவர் எல்லாம் நடிச்சோமா, கூலிய பணம் வாங்கிட்டு போய்கிட்டே இருக்கணும் ? அறிவாளிகள் இருக்கிற சபை அப்படின்னு சொல்லிட்டு பெரிய அறிவாளி மாதிரி பேசி இவர் ஜோக்கராயிட்டார்


Sampath Kumar
ஆக 27, 2024 10:07

கோவை அணுக ரோம்ப குசுமு பிடித்தவர்கள் அதுனால இவரு பேச்சை வர வரிக்கிறார்கள் போல ரஜினிக்கு புரிந்தால் சரி


நாநி
ஆக 27, 2024 09:00

அது சரி நீ இளைஞரா இருந்தப்ப என்னத்த நட்டுகிட்டு இருந்த??


பச்சையப்ன் கோபால் புரம்
ஆக 27, 2024 08:55

அட போய்யா 80 வயசுல ஜீரோவா நடிச்சுகிட்டு இளைஞர்களுக்கு அட்வைஸ் பண்றத பாரு. முதல்ல நீ இடத்தை காலி பண்ணு. அடுந்து உதய்ணா இன்பாண்ணாணு ஒரு பெரிய பட்டாளத்தையே எங்க தளபதி ரெடி பண்ணி வச்சிருக்காறு.பேவையா!!


Sivaswamy Somasundaram
ஆக 27, 2024 08:54

கழுத்துல கயிறைக்கட்டி கிணத்துல ஆழம் பார்க்க இறக்கியிருக்காங்க. பாவம் என்ன நிர்பந்தமோ ?


sridhar
ஆக 27, 2024 08:19

ரஜினி அந்த கட்சி முதலாளியின் கம்பெனியில் நிரந்தர ஊழியன் , அவர் சொன்னதை தான் பேசினார் .


Bharathi
ஆக 27, 2024 08:03

Yes but he will be in safe zone


N Sasikumar Yadhav
ஆக 27, 2024 07:50

இளைஞர்கள் விஞ்ஞானியான ஊழல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்கள் பின்னாடி செல்வதை தவிர்த்து படித்தவர்களை பின்தொடர்ந்து சென்று பாரதநாட்டை பாதுகாப்பாக கட்டியமைக்க வேண்டும்


புதிய வீடியோ