உள்ளூர் செய்திகள்

மகளிர் தின விழா

இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை ஞானசவுந்தரி வரவேற்றார்.ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான், முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்தி பேசினர். கணிதவியல் உதவிப்பேராசிரியை பாத்திமா கனி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை விஜயலட்சுமி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான், பி.எட்., கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா பங்கேற்றனர். துறைத்தலைவர் வர்ஷா யாஸ்மின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை