உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் பணிகளால் விபத்து

பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் பணிகளால் விபத்து

திருப்புவனம், ; திருப்புவனத்தில் கழிவு நீர் கால்வாய் மீது பாலம் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தியதால் தினசரி பொதுமக்கள் பலரும் தடுமாறி விழுந்து காயமடைவதுடன் வாகனங்களும் சிக்கி சேதமடைகின்றன.திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் அருகே உள்ள சாக்கடை கால்வாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக ரோட்டில் கழிவு நீர் செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து கழிவு நீர் பாலத்தை உயர்த்தி கட்டும் பணி நடந்து வந்தது.ஒருசில நாட்களிலேயே பாலத்தின் இருபுறமும் இணைக்காமல் அப்படியே பணிகளை நிறுத்தி விட்டனர். உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவையும் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் இந்த பாலத்தின் பணிகள் முடிவடையாததால் இப்பாலத்தை கடக்க முயலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினசரி தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.சாலையை விட சாக்கடை கால்வாயின் உயரம் ஒன்றரை அடிக்கும் மேலாக இருப்பதால் இந்த விபத்துக்கள் நேரிடுகின்றன. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. மதுரையில் இருந்து உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஒரு பயணியை இறக்கி விட வந்த வாடகை கார் கால்வாய் பாலத்தில் சிக்கி கொண்டது.எவ்வளவோ முயற்சி செய்தும் கார் நகரவே இல்லை. இதனையடுத்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் காரை அப்படியே தூக்கி வெளியே கொண்டு வந்தனர். பாலத்தில் கார் சிக்கியதில் வாகனமும் சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ