உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்குவரத்து பணிமனையில் 20 லட்சத்தில் சிமென்ட் தரை தளம்

போக்குவரத்து பணிமனையில் 20 லட்சத்தில் சிமென்ட் தரை தளம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் அரசு போக்குவரத்து கிளை பணி மனைக்கு 20 லட்ச ரூபாய் செலவில் எம்.எல்.ஏ., தமிழரசி நிதியில் தரை தளம் அமைக்கப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.திருப்புவனத்தில் 2015 அ.தி.மு.க., ஆட்சியில் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை சொந்த கட்டடத்தில் செயல்பட தொடங்கியது. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினசரி இரண்டு முதல் ஐந்து முறை வரை மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மழை காலங்களில் பணிமனை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவதில்லை. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ., தமிழரசியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு சிமென்ட் தரை தளம் அமைக்கப்பட்டு நேற்று திறந்து வைத்தார். விழாவில் திருப்புவனம்பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், பணிமனை மேலாளர் அசோக்குமார்,துணை மேலாளர் தயாள கிருஷ்ணன், தொமுச கிளை செயலாளர் மீனாட்சி சுந்தரம்,முருகன், மகேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ