உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் முதல்வர் மருந்தகம் துவக்கி வைத்த கலெக்டர் 

சிவகங்கையில் முதல்வர் மருந்தகம் துவக்கி வைத்த கலெக்டர் 

சிவகங்கை: சிவகங்கை ஏ.கே.ஆர்., நகரில் முதல்வர் மருந்தகத்தின் முதல் விற்பனையை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.முதல்வர் மருந்தக திட்டம் மூலம் மாநில அளவில் 1000 மருந்தகம் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று கூட்டுறவுதுறை மூலம் முதல்வர்மருந்தகம் திறக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் அந்தந்த மாவட்டத்தில் பார்வையிட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் நேரடியாக 14, தொழில் முனைவோர் மூலம் 8 மருந்தகங்கள் என இங்கு 22 மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இதற்கான மருந்து கோடவுன் சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை ஏ.கே.ஆர்., நகர் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், கோட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். துணை பதிவாளர்கள் ஜெய்சங்கர், பாபு, பாரதி, ஆர். குமரன்,குமரேசன் (கூட்டுறவு ஒன்றியம்), தாசில்தார் சிவராமன், நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன் பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் தொழில் முனைவோருக்கு மருந்தகம் துவக்க ரூ.3 லட்சம் வரை மானியமாக வழங்குகின்றனர். குறைந்த விலையில் அனைத்துவிதமான மருந்துகளும் இங்கு விற்கப்படும் என கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ