உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை 2 ஆண்டுகளாகியும் பணியில் தொய்வு

நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை 2 ஆண்டுகளாகியும் பணியில் தொய்வு

காரைக்குடி : செட்டிநாடு கால்நடை பண்ணையில் அமைய உள்ள குஞ்சு பொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் தீவன ஆலை பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்..காரைக்குடி அருகேயுள்ள செட்டிநாடு கால்நடை பண்ணையில், நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.13.81 கோடியில் புதிய கட்டடப்பணி அடிக்கல் நாட்டு விழா 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் குஞ்சு பொரிப்பகத்திற்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளாகியும் இதுவரை பணி முழுமையடையவில்லை. கட்டடப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. முக்கிய உபகரணங்களான, கோழிப்பண்ணை மற்றும் கோழி குஞ்சுபொரிப்பகத்திற்கானஉபகரணங்கள் இதுவரை வரவில்லை.தற்போது, பல கிராமங்களிலும் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும்ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.செட்டிநாடு நாட்டுக்கோழி பண்ணை, குஞ்சு பொரிப்பகம் அமைந்தால் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தவிர இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த அதிநவீன தொழில்நுட்ப பயிற்சியும் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயரவாய்ப்புள்ளது. எனவே விரைவில் கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் கூறுகையில்: செட்டிநாடு கால்நடை பண்ணையில், குஞ்சு பொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழி இனப்பெருக்கபண்ணை மற்றும் தீவன ஆலை கட்டடப் பணி முடிந்துள்ளது. தற்போது, நவீன உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. அதிக செலவீனம் என்பதால் டெண்டர் மூலம் உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது. விரைவில் உபகரணங்கள் பொருத்தும் பணி முடிந்ததும் திறப்பு விழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ