உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 2ஆயிரம் மினிபஸ்களுக்கு அனுமதி வழங்க திட்டம்

2ஆயிரம் மினிபஸ்களுக்கு அனுமதி வழங்க திட்டம்

சிவகங்கை:தமிழகத்தில் 2000 மினி பஸ்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.பல கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் 2 ஆயிரம் மினி பஸ் இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தலைமை செயலர் தலைமையில் கலெக்டர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ்' கூட்டம் நடத்தி வழித்தட விபரங்களை பெற்றுள்ளனர். முதற்கட்டமாக 820 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் 7 கி.மீ., வரை மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும். அதற்கு பிறகு அரசு பஸ்கள் செல்லாத கிராமங்களுக்குள் தான் செல்ல வேண்டும். அதிகபட்சம் 25 கி.மீ., வரை பஸ்களை இயக்கலாம் என அனுமதி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ