தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி
சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு செப்.11,12,ல் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது:6 முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி செப்.11,12ல் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. வெற்றிபெறும் பள்ளி கல்லுாரி மாணவ மாணவியருக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000,பாராட்டுச் சான்று வழங்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி காலை 9:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மதியம் 2:00 மணிக்கும் துவங்கும்.சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான விதிமுறைகள் தலைப்புகளுடன் பங்கேற்பு படிவங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கல்லுாரிக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர், கல்லுாரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பம் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளில் நேரில் அளித்து பங்கேற்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575 -241487 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என்றார்.