உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருட்டில் தவிக்கும் திருப்புவனம் மக்கள்

இருட்டில் தவிக்கும் திருப்புவனம் மக்கள்

திருப்புவனம்:திருப்புவனம் பிரதான வீதியில் உயர்மின் கோபுர விளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் இருட்டில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.திருப்புவனம் நகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் மதுரை நகரில் கூலி வேலை செய்து வருகின்றனர்.மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்காக கிராமப்புற மக்கள் திருப்புவனம் நகரில் குடியேறி வருகின்றனர். தினசரி காலையில் வேலைக்கு சென்று இரவு வெகு நேரம் கழித்து ஊர் திரும்புகின்றனர். திருப்புவனம் கோட்டை பஸ் ஸ்டாப்பில் வெளியூர் மற்றும் நகரப்பேருந்து நின்று செல்கின்றன.மக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து உள்ளது. இரவு 10:00 மணிக்கு மேல் 45 நிமிடத்திற்கு ஒரு பஸ் திருப்புவனம் நகருக்குள் வந்து செல்வது வழக்கம், இரவு பத்து மணி வரை வியாபார கடைகள் இருப்பதால் ஓரளவிற்கு வெளிச்சம் இருக்கும், அதன்பின் நகரே அமைதியாக வெளிச்சம் இன்றி இருட்டில் மூழ்கி கிடப்பதால் வெகு நேரம் கழித்து ஊர் திரும்புபவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இருட்டை சாதகமாக பயன்படுத்தி கொண்டு வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன. பிரதான வீதியான கோட்டை பஸ் ஸ்டாப், நரிக்குடி விலக்கு உள்ளிட்ட இடங்களில் உயர் மின்கோபுர விளக்கே கிடையாது.சிவகங்கை ரோட்டில் மட்டுமே உயர் மின் கோபுர விளக்கு உள்ளது. பிரதான சாலையில் உயர்கோபுர விளக்கே இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !