வாணியம்பட்டியில் திருவிளக்கு பூஜை
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம்வாணியம்பட்டி செல்வகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.காரியேந்தல்பட்டி பதினென் சித்தர் பீடம் குருகுல தலைமை செயலாளர் அன்புசேவுகன் தலைமையில் தமிழ் வேத ஆகம சித்தர்நெறி முறைப்படி பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக சிவ யாக வேள்வி, நந்தீசுவரர் யாக வேள்வி நடத்தப்பட்டது. பெண்கள் குத்துவிளக்குகளில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர்.மூலவர் விநாயகருக்கு தீபாராதனை நடந்து பக்தர்கள் தரிசித்தனர்.