வி.ஏ.ஓ., கட்டடம் சீரமைப்பு
சிவகங்கை: சிவகங்கை அருகே கள்ளராதினிப்பட்டியில் சேதம் அடைந்த வி.ஏ.ஓ., கட்டடத்தை இளைஞர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டது.சிவகங்கை அருகே கள்ளராதினிப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் 20 ஆண்டிற்கு முன் கட்டப்பட்டது. இக்கட்டடத்தின் கூரை சிதிலமடைந்து காணப்பட்டது. இக்கட்டடத்தை சீரமைக்க பல முறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இக்கிராம மக்கள் ஒன்றினைந்து ரூ.1.30 லட்சம் வரை வசூலித்து, வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைத்தனர்.