வெட்டுடையார் காளி கோயில் கும்பாபிேஷகம்
சிவகங்கை ; கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடைபெற்றது.கும்பாபிேஷக விழாவில் கொ.அழகாபுரி உடையப்பன் என்ற செந்தில் செட்டியார், தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார், கொ.அழகாபுரி மெய்யப்ப செட்டியார், வேலாயுதம் செட்டியார், தேவகோட்டை சின்ன வள்ளியப்பன் செட்டியார், காசிநாதன் செட்டியார், புஷ்ப.சுவாமிநாதன், தேவகோட்டை என்.சொக்கலிங்கம் செட்டியார், குருநாக்கல் அண்ணாமலை செட்டியார், கோயில் ஸ்தானிகர் மெய்யப்பன் என்ற சேகர், காளையப்பா சா மில் உரிமையாளர் ஆர்.முத்துக்குமரன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணப்பன், கொல்லங்குடி ஊராட்சி தலைவர் மெய்ஞான மூர்த்தி, அரசு வழக்கறிஞர் பிரபாகரன், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காளையார்கோவில் எஸ்.ஐ., குகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.