உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு கலெக்டரிடம் பெண்கள் புகார்

பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு கலெக்டரிடம் பெண்கள் புகார்

சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகர் செல்லும் ரோட்டில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 608 வரை கட்டியுள்ளனர். இந்த வீட்டில் 400 வீடுகளை விலைக்கு வாங்கியுள்ளனர். எஞ்சிய 200 வீடுகள் இன்னும் விற்பனை ஆகாமல் உள்ளது. தற்போது இக்குடியிருப்புகளில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. போதிய மின் விளக்கு வசதி இல்லை.விற்காத வீடுகளில் சிலர் குடியேறி உள்ளனர். சிலர் வாங்கிய வீடுகளில் குடியேறாமல் பிறருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். ஆட்கள் இல்லாத வீடுகளில் சிலர் குடியேறி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு குடியிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தில் போதிய 'சிசிடிவி' கேமரா, தெருவிளக்கு வசதிகள் செய்துதர வேண்டும் என கலெக்டரிடம் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை