டிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது: ஒருவர் சரண்
இளையான்குடி: இளையான்குடி அருகே வேலடிமடை பஸ் ஸ்டாப்பில் துாங்கிக் கொண்டிருந்த திருவாரூர் மாவட்டம் சிறுகளத்துார் கிராமத்தைச் சேர்ந்த கதிரடிக்கும் இயந்திர டிரைவர் மகேைஷ ஏப்.14ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு 2 டூவீலர்களில் வந்த 3 பேர் அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்தனர். சத்தம் கேட்டு வந்த கிளீனர் நவீனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.இளையான்குடி போலீசார் வேலடிமடை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் 23, மானாமதுரை மூங்கில் ஊரணி சிம்பு என்ற சிலம்பரசன் 21, இருவரையும் கைது செய்தனர். மேலும் வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு 23,என்பவர் மற்றொரு வழக்கில் சிவகங்கை கோட்டில் சரணடைந்தார். விசாரணையின் போது ஆனந்த் தவறி விழுந்ததில் கையில் காயமேற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது: தொடர்புடைய 3 பேரும் சம்பவத்தன்று கிளீனர் நவீனின் டூவீலரை எடுப்பதற்காக சென்றபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து போதையில் 3 பேரும் டிரைவர் மகேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்ததோடு கிளீனர் நவீனையும் அரிவாளால் வெட்டியதாக கூறினர்.