மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மூன்று மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதில் வயலில் நின்று கொண்டிருந்த 3 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. காரைக்குடி, காளவாய் பொட்டல், கணேசபுரம், மீனாட்சிபுரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. டேங்கர் லாரி மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.