உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழிலாளி கொலையில் 4 பேர் சிக்கினர்

தொழிலாளி கொலையில் 4 பேர் சிக்கினர்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காளையார் 56. இவர் நேற்று முன்தினம் பாப்பாக்குடி கண்மாயில் விறகு வெட்ட சென்றார். அங்கிருந்த சிலர் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் காளையார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பூவந்தி போலீசார் விசாரித்தனர்.இவரது உடல் வைக்கப்பட்டிருந்த சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி மானாமதுரை ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் , கொலையாளிகளை பிடிக்க மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்தார். தனிப்படையினர் நேற்று கிளாதரியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் 24, வீரணன் மகன் நவீன்குமார் 24, அஞ்சூரன் மகன் ரமேஷ் 34 ,பாப்பாகுடி சேவுகன் மகன் மணிகண்டன் 33 ,ஆகிய 4 பேரை பிடித்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ