சர்வீஸ் ரோட்டில் சாய்ந்த மின் கம்பம்
மானாமதுரை:மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிசாலையின் இடது புற சர்வீஸ் ரோட்டில் தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயில் பின்புறம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளது.இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின் வாரியத்தினர் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.