உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்ஸ்பெக்டர் வாகனங்களில் சைரன் பொருத்த நடவடிக்கை

இன்ஸ்பெக்டர் வாகனங்களில் சைரன் பொருத்த நடவடிக்கை

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட 33 போலீஸ் ஸ்டேஷன்கள்உள்ளன. இவற்றில் குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்டவற்றிற்கு இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் சமுதாய தலைவர்கள் நினைவு தினம், குருபூஜை உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம், அதிலும் மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் உட்பட மாவட்டத்தில் உள்ள 30 இன்ஸ்பெக்டர்களின்வாகனங்களுக்கும் ரிவால்விங் சைரன் பொருத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் நினைவு தினம் உள்ளிட்ட சம்பவங்களின் போது விரைவாக செல்லவும்,சட்டம் ஒழுங்கு பிரச்னையை கையாள விரைவாக செல்லவும் இந்த வாகனங்களில் சைரன் பொருத்தப்பட்டுஉள்ளது. பொதுவாக டி.எஸ்.பி.,உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே விரைவாக செல்ல சைரன் பொருத்தப்படும். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்களுக்கு முதன் முதலாக பொருத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை