உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துழாவூர் ஆதின குருபூஜை

துழாவூர் ஆதின குருபூஜை

நாச்சியாபுரம்: திருப்புத்துார் தாலுகா துழாவூர் ஆதினம் 1081 ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.துழாவூர் ஆதினம் நிரம்ப அழகிய தேசிக பரமாசாரிய சுவாமி 1081-ம் ஆண்டு குருபூஜை விழாவிற்கு ஆதின இளவரசு சுந்தரேச தேசிகர் வரவேற்றார். மடத்தின் ஆதினகர்த்தர் தலைமை வகித்தார். தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் சிவபுரம் ஆதினம் திருநாவுக்கரசு தேசிக சுவாமி வாழ்த்துரையாற்றினார்.பாதரக்குடி சுவாமி ரவீந்திரர் அருளாசி வழங்கினார். பின்னர் துழாவூர் ஆதினத்தின் சார்பில் திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர் பிச்சப்பா மணிகண்டனுக்கு 'அறமனச் செம்மல்' எனும் கவுரவ விருது வழங்கப்பட்டது. ராமநாதன் பாராட்டுரை வழங்கினார். ஜெய் திருஞானசம்பந்தன் நன்றிகூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !