மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் மாநாடு
06-Sep-2024
தேவகோட்டை ; தேவகோட்டை தாலுகா வாடிநன்னியூரைச் சேர்ந்தவர் கண்ணன். 63. இவர் நேற்று முன்தினம் முப்பையூர் வங்கியில் ரூ. மூன்று லட்சத்தை எடுத்தார். டூவீலரில் முன்புறம் வைத்து சின்னகீரமங்கலம் தனியார் வங்கியில் மகளின் நகையை திருப்ப சென்றார்.பணம் எடுத்து செல்வதை வங்கியிலிருந்தே நோட்டமிட்ட மூன்று பேர் டூவீலரில் கண்ணனை பின் தொடர்ந்தனர். முப்பையூர் அய்யனார் கோவில் அருகே கண்ணன் செல்லும் போது பணம் கீழே விழுந்து கிடப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.கண்ணன் கீழே கிடந்த பணத்தை எடுப்பதற்காக தனது வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தில் பையில் வைத்து இருந்த ரூபாய் மூன்று லட்சத்தை எடுத்துக் கொண்டு மூவரும் தப்பினர்.புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Sep-2024