போக்சோவில் கைது
காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்தவர் சங்கரன் 45. கவரிங் நகை பட்டறை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று அலைபேசியை காட்டி பாலியல் தொல்லை செய்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தனர். போலீசார் சங்கரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.