உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்  

விழிப்புணர்வு முகாம்  

சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை இணைந்து சிவகங்கையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.சார்பு நீதிபதி ராதிகா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர். தொழில் நலத்துறை உதவி கமிஷனர் சதீஷ்குமார், தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குனர் சுஜின் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ